2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பொலிகண்டி நலன்புரிமுகாம் மக்கள் இடப்பெயர்வு

Gavitha   / 2014 நவம்பர் 29 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா

பருத்தித்துறை பொலிகண்டி நலன்புரி முகாமில் உள்ள 69 குடும்பங்களைச் சேர்ந்த 239 பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக, குறித்த பகுதியில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் உட்புகுந்துள்ளது.
மூன்று நாட்களாக பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த பகுதிக்கு அருகில் உள்ள கூட்டுறவு மண்டபத்தில் தங்கியுள்ளார்கள்.

இந்த மக்களுக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் ஊடாக மூன்று வேளை சாப்பாடு வழங்கப்பட்டு வருகின்றது. வேறு எந்த உதவிகளும் வழங்கப்படவில்லை.

அத்துடன் குறிப்பிட்ட பகுதி மக்கள் 'தாம் பலாலி வடக்கை சொந்த இடமாக கொண்டுள்ளதாகவும் ஆனால் தம்மை இது வரைக்கும் சொந்த இடத்தில் குடியேற்றப்படாததால் நிம்மதியற்ற வாழ்கை வாழ்கின்றோம்' என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

இது தொடர்பாக யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது,
அவர்களுக்குரிய உடனடி நிவாரணங்கள் கிராமசேவகர் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் மிக விரைவில் நடைபெறும் என்று தெரிவித்தார்.

அத்துடன் வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சனிக்கிழமை (29) பால்மா மற்றும் உலர் உணவுப்பொருட்கள் வழங்கியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .