2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

2014இல் 420 இந்திய மீனவர்கள் கைது

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 22 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த வருடத்தில் மாத்திரம் யாழ்.மாவட்டத்தை அண்மிய கடற்பரப்புக்களிலிருந்து 420 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள  பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி புதன்கிழமை (22) தெரிவித்தார்.

மேற்படி 420 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து தங்களிடம் ஒப்படைத்ததாகவும் அவர்களுக்கு எதிராக யாழ்.மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் 17 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து, ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் உத்தரவுக்கமைய கைது செய்யப்பட்ட மீனவர்களில் 400பேர் விடுவிக்கப்பட்டதுடன், அவர்களின் படகுகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

எஞ்சிய 20 மீனவர்களும் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .