George / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் சனிக்கிழமை(07) இரவு சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.றொகான் மகேஸ் தெரிவித்தார்.
தாவடி, இளவாலை மற்றும் ஆனைக்கோட்டையை சேர்ந்த இந்த சந்தேகநபர்களிடமிருந்து குறடுகள், கத்தி மற்றும் கம்பிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.
வீதியில் நடமாடிய சந்தேகநபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, சந்தேகத்துக்கிடமான தகவல்களை வழங்கியுள்ளனர். இதனையடுத்து ஐவரும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொறுப்பதிகாரி கூறினார்.
38 minute ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
26 Oct 2025