2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நாயாற்றில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்

Gavitha   / 2015 மார்ச் 30 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு நாயாறு கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடிக்கும் தென்னிலங்கை மீனவர்களை கட்டுப்படுத்தும்படி முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட பிரச்சினைகள், தேவைகள் என்பன பற்றி பிரதிநிதிகளுடன் ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

நாயாற்றில் மீன்பிடிப்பதற்கு 73 தென்னிலங்கை கடற்றொழிலாளர்களுக்கு,  முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னா அனுமதி  வழங்கினார். ஆனால் தற்போது 250க்கும் மேற்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பலர் சட்டவிரோதமான முறையில் மீன்பிடிக்கின்றனர் என்றார்.
காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை

முல்லைத்தீவின் கேப்பாப்புலவு உள்ளிட்ட மாவட்டத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள காணிகளையும் வீடுகளையும் விடுவித்து மக்களை மீள்குடியேற்றம் செய்யுமாறும் அப்பகுதி மக்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X