Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கையை கட்டுப்படுத்த 15பேர் கொண்ட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்படும் என வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்க தெரிவித்தார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தின்போது, 'மணற்காட்டு பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. பதிவு இல்லாத உழவு இயந்திரங்களில் வருவோரே அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்' என்று சுட்டிக்காட்டப்பட்டது.
இது தொடர்பில் எடுத்துக்கூறிய பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் பூபாலசிங்கம் சஞ்ஜீவன், 'உழவு இயந்திரத்தில் பொய்யான இலக்கதகடுகளை பொருத்தி வருகின்றனர். ஒவ்வொரு உழவு இயந்திரங்களிலும் 10க்கும் மேற்பட்டவர்கள் வருகின்றார்கள். அவர்களை ஊர்மக்களால் தடுக்க முடியவில்லை' என்றார்.
அத்துடன், 'நாளொன்றுக்கு இவ்வாறாக 40 உழவு இயந்திரங்கள் மண் எடுத்துச் செல்கின்றன. அவர்கள் வேகமாக உழவு இயந்திரத்தை ஓட்டிச் செல்வதனால் விபத்துக்களும் அதிகளவில் இடம்பெறுகின்றன. சட்டவிரோத மண் அகழ்வை கட்டுப்படுத்த பொலிஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தவிசாளர் கோரினார்.
இதற்கு பதிலளித்த சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர், 'இப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கையை கட்டுப்படுத்த 15பேர் கொண்ட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்படும்' என்று கூறினார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago