Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kogilavani / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
'கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சின் மூலம் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மானிய அடிப்படையிலான வலைகள், எமது பகுதி கடற்றொழிலாளர்களின் தொழிற் செயற்பாடுகளுக்கு பொருத்தமோ, தரமோ அற்றவை என்பதால், பொருத்தமான வலைகளை வழங்க மேற்படி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்;,
கடந்த அரசு கடற்றொழிலாளர்களுக்கு வழங்கிவந்த எரிபொருள் மானியத்தை நிறுத்தி, அதற்கு பதிலாக ஜி.பி.எஸ் உபகரணங்கள், ஐஸ் பெட்டிகள், படகு இயந்திரங்கள் மற்றும் வலைகளை வழங்கியது.
இவ்வாறு வழங்கப்படுகின்ற வலைகள் தங்களது தொழிலுக்கு பொருத்தமற்றவை என்றும், தரமற்றவை என்றும் எமது கடற்றொழிலாளர்கள் என்னிடம் தெரிவித்திருந்தனர்.
கடந்த மாதம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இதுபற்றி எடுத்துக் கூறியிருந்தேன். பின்னர் எழுத்து மூல கோரிக்கையையும் இந்த அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளேன்.
எமது கடற்றொழிலாளர்கள் வழமையாக பயன்படுத்திவரும் 1,500 அடி நீளமும் 330 அடி அகலமும் கொண்ட வலைக்கு பதிலாக, 3500 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்ட வலைகளே தற்போது வழங்கப்படுகின்றன.
எனவே, கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி, பொருத்தமான வலைகளை வழங்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago