2025 ஜூலை 16, புதன்கிழமை

விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை சுரேஷ் பார்வையிட்டார்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வலி. கிழக்கு மற்றும் வலி. வடக்கில் கடந்த 25 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், சனிக்கிழமை (18) நேரில் சென்று பார்வையிட்டார்.

வலி.கிழக்கில் கோப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வளலாய் ஜே/284 கிராம சேவையாளர் பிரிவில் சிறு பகுதி இரண்டாம் கட்டமாக கடந்த 11ஆம் திகதி விடுவிக்கப்பட்டது.

அப்பகுதியுடன் சேர்த்து வலி.வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட பலாலி கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் சிறு பகுதியும் விடுவிக்கப்பட்டது.

விடுவிக்கப்பட்ட அவ்விரு கிராம சேவையாளர் பிரிவுகளையும் இன்று நேரில் சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் அங்கு துப்பரவு பணிகளில் ஈடுபட்டுள்ள காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .