2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தேவாலய உண்டியலை உடைக்க முற்பட்டவர் சிக்கினார்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.சில்லாலை கதிரமாத தேவாலயத்தின் காணிக்கை உண்டியலை உடைத்து திருடமுற்பட்ட சந்தேகநபரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து ஞாயிற்றுக்கிழமை (19) தங்களிடம் ஒப்படைத்ததாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

தேவாலயத்தில் எவரும் இல்லாத சமயம் பார்த்து, உள்நுழைந்து அங்கிருந்த உண்டியலை உடைக்க முற்பட்டபோது, சத்தம் கேட்டு அருகில் நின்றிருந்த இளைஞர்கள் தேவாலயத்துக்குள் சென்றபோது, சந்தேகநபர் தப்பித்து ஓடமுயன்றுள்ளார்.

சந்தேகநபரை மடக்கிப் பிடித்த இளைஞர்கள், பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .