Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Administrator / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வளலாய் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை, 20 வருடங்களின் பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை (21) தொடக்கம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா இந்த பாடசாலையின் நடவடிக்கைகளை சம்பிராதயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
பாடசாலையின் பழைய கட்டம் முற்றாக அழிவடைந்தமையால் வளலாய் பகுதியில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் இந்தப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மீள ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைக்கு அதிபராக எஸ்.ரவீந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். தரம் 1 முதல் 5 வரையான வகுப்புக்களைக் கொண்ட இந்தப் பாடசாலையில் தற்போது 21 மாணவர்கள் இணைந்துள்ளனர்.
மாணவர்களின் இணைவை கண்காணித்து தற்காலிக கொட்டகைகள் மற்றும் ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அமெரிக்க மிஷனரிகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலையில் தரம் 1 முதல் க.பொ.த சாதாரண தரம் வரையில் வகுப்புக்கள் உள்ள பாடசாலையாக முன்னர் இருந்தது. இடப்பெயர்வின் பின்னர், இந்தப் பாடசாலை முற்று முழுதாக சேதமடைந்தது.
வளலாய் மேற்கு பகுதியில் 2011ஆம் ஆண்டு மக்கள் மீள்குடியேற்றம் செய்தபோதும், பாடசாலை இயங்காமையால் வளலாய் மாணவர்கள் அச்சுவேலி மத்திய கல்லூரி மற்றும் இடைக்காடு மகா வித்தியாலயம் ஆகியவற்றில் தமது கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் வலளாய் மீள்குடியேற்ற குழு ஆகியவை இணைந்து மேற்கொண்ட முயற்சியின் காரணமாக பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
1 hours ago