Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
தெல்லிப்பளை கல்விக் கோட்டத்துக்குட்பட்ட மல்லாகம் மகா வித்தியாலயத்துக்கு வியாழக்கிழமை (24) விஜயம் மேற்கொண்ட வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, பாடசாலையில் இருந்த சீரற்ற விடயங்கள் சிலவற்றை சீர் செய்ய நடவடிக்கை எடுத்தார்.
பாடசாலை ஆசிரியர்களின் கதிரைகள் பின்னல்கள் அறுந்தமையால் சீர்செய்யப்படாமல், பாடசாலை கட்டட மேல்மாடியின் அடுக்கி விடப்பட்டிருந்தது. மழை, வெயிலில் அந்தக் கதிரைகள் பாதிக்கப்பட்டன. அவற்றை எடுத்து பாதுகாப்பான முறையில் உள்ளே வைக்க உத்தரவிட்ட அமைச்சர், அவற்றுக்கு பின்னல் செய்யவும் உத்தரவிட்டார்.
விஞ்ஞான ஆய்வுகூடம் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் தூசி நிறைந்து காணப்பட்டதையும் துப்பரவு செய்வித்தார். கணினி ஆய்வுகூடத்தில் திருத்தம் செய்யவேண்டிய கணினிகளை திருத்துவதற்கு உதவியளிப்பதாகக் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
5 hours ago