2025 ஜூலை 09, புதன்கிழமை

கோண்டாவில் பகுதியில் பதற்றம்

Thipaan   / 2015 மே 05 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன், நா.நவரத்தினராசா

யாழ். கோண்டாவில் டிப்போவுக்கு முன்பாக, வீதியில் நின்ற வயோதிபரை செவ்வாய்க்கிழமை (05) காலையில் பிஸ்கட் கம்பனியின் கன்டர் வாகனம் மோதியதையடுத்து அந்தப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கன்டர் மோதியதில் உரும்பிராய் தெற்கு சேர்ந்த சீனியர் ஞானம் (வயது 55) என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து, அவ்விடத்துக்கு வந்த பொதுமக்கள், கன்டர் வாகனத்தை பெற்றோல் ஊற்றி கொளுத்த முற்பட்டனர்.

அவ்விடத்துக்கு சென்ற கோப்பாய் பொலிஸார் பதற்றத்தை தணித்து, பொதுமக்களை விரட்டினர். அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோண்டாவிலிருந்து உரும்பிராய் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பிஸ்கட் கம்பனியொன்றின் கன்ரர் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகிலிருந்து மின்கம்பத்தை மோதியதுடன், அருகில் நின்றிருந்த வயோபதிபர் ஒருவரையும் மோதியது. அதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 வயோதிபரை மோதித்தள்ளிய கன்ரர் வாகன சாரதியை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத்தை பொலிஸார் எடுத்துச் செல்வதற்கு பொதுமக்கள் அனுமதியளிக்காத நிலையில், அங்கு சென்ற கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிதி சஞ்சீவ ஜெயக்கொடி, பொதுமக்களுடன் சமரசம் செய்து வாகனத்தை எடுத்துச் சென்றதுடன், வாகன சாரதியையும் கைது செய்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .