2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இலங்கை மீனவர்கள் 5 பேர் காங்கேசன்துறை வந்தடைந்தனர்

George   / 2015 மே 13 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருகோணமலை சீனன்குடாவைச் சேர்ந்த 5 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை (12) மாலை காங்கேசன்துறையை வந்தடைந்ததாக யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரியொருவர் கூறினார்.

கடந்த மார்ச் மாதம் கைதுசெய்யபட்ட இந்த மீனவர்கள், இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வரஹே நுவான் சானக (வயது 24), ரவுன்ரா ஹென்றிஹே லகிறு (வயது 22), வர்ணகுல ஆர்ட்டிக்கே நிசங்க தர்சன குமார (வயது 32), மரக்கல மானிக்க சமீர மதுசாந்த (வயது 21), மரக்கல மானிக்க உதய மேனக (வயது 28) ஆகிய ஐந்து மீனவர்களே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்களையும் அவர்களின் ஒரு படகையும் அவர்களது சொந்த இடத்துக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாக அந்த அதிகாரி கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .