Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
R.Tharaniya / 2025 ஜூலை 08 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த இனிய பாரதியின் முன்னாள் வாகன சாரதியான தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த செழியன் என்று அழைக்கப்படும் அழகரட்ணம் யுவராஜ் என்பவர் கல்முனை நகரில் வைத்து சிஜடி யினர் திங்கட்கிழமை(7) கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்களை நடத்துதல், மிரட்டி பணம் பறித்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாக பணியாற்றிய இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார அவரது சகா தவசீலன் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை (6) சி ஐ டி யினரால் கைது செய்யப்பட்டனர்
இந்த நிலையில் இனிய பாரதியின் முன்னாள் சாரதியான திருக்கோயில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் முதலாம் பிரிவைச் சேர்ந்த தனியார் பஸ் வண்டி சாரதியாக கடமையாற்றி வரும் செழியன் என்றழைக்கப்படும் அழகரட்ணம் யுவராஜ் என்பவர் சம்பவதினமான திங்கட்கிழமை (07) கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
பொத்துவில் இருந்து மட்டக்களப்பு நோக்கி போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பஸ் வண்டியை செலுத்திச் சென்ற நிலையில் கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தில் காத்திருந்த சிஜடி யினர் கல்முனை நகர் பஸ் தரிப்பு நிலையத்துக்கு பஸ்வண்டி வந்த நிலையில் அவரை கைது செய்தனர்
இதில் கைது செய்யப்பட்டவரை திருக்கோயில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
43 minute ago
51 minute ago
2 hours ago