Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2025 ஜூலை 08 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலையம் அருகில் உள்ள காணியை பொலிஸார் துப்புரவு செய்யும் வேலை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச் ) சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய வன்னிமாவட்ட எம்.பி. யான செல்வம் அடைக்கலநாதன், ஓமந்தை காணி விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதே அரசாங்கத்தால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
செல்வம் அடைக்கலநாதன் எம்.பி இது தொடர்பில் கூறுகையில்,வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையம் அருகில் உள்ள காணியை பொலிஸார் துப்புரவு செய்யும் வேலை இடம்பெறுகின்றது. மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு முரணாகவே ஓமந்தை பொலிஸார் பலாத்காரமாக இந்த காணியை துப்புரவு செய்து ஆக்கிரமிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
உடனடியாக எழுந்த சபைமுதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க ,இந்த விடயம் தொடர்பில் எமது மாவட்ட எம்.பி யும் எமக்கு அறிவித்தார். நாம் உடனடியாக அந்த வேலையை நிறுத்தியுள்ளோம் என்றார்.
இதனையடுத்து எழுந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேசேகர,வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையம் அருகில் உள்ள காணியை பொலிஸார் துப்புரவு செய்யும் வேலை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.பொலிஸ்மா அதிபருடன் நான் பேசி அதற்கான உத்தரவை வழங்கியுள்ளேன். அந்த வேலை இனி இடம்பெறாது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
55 minute ago
2 hours ago