2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

புங்குடுதீவு மாணவி கொலை

Menaka Mookandi   / 2015 மே 14 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

புங்குடுதீவைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவியொருவர் கொலை செய்யப்பட்டு பற்றைக்குள் வீசப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை (14) காலையில் மீட்டதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

புதன்கிழமை (13) பாடசாலைக்குச் சென்ற மாணவி மாலை வீடு திரும்பாததையடுத்து, பெற்றோர் மாணவியை தேடியுள்ளனர். தொடர்ந்து மாணவியை காணவில்லையென ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை (14) காலை ஆள்நடமாட்டமற்ற பற்றைக்குள் பெண்ணொருவரின் சடலம் இருப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலத்தை கண்டுபிடிக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .