Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2015 மே 14 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
கழிவு எண்ணெய் பாதிப்புக்குள்ளாகிய பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு மாதாந்தம் சுமார் 1 மில்லியன் ரூபாய் செலவு செய்து வருவதாக வலிகாமம் வடக்கு (தெல்லிப்பளை) பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் வியாழக்கிழமை (14) தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
எமது பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு இருப்பதாக பொதுச்சுகாதார பரிசோதகர்களால் உறுதிப்படுத்தப்பட்டு, அப்பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்கின்றோம்.
எங்களுடன் இணைந்து பிரதேச செயலகம், யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஆகியனவும் இணைந்து சுமார் 250 குடிநீர் தாங்கிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் வைத்து குடிநீர் விநியோகம் செய்கின்றோம்.
தொண்டைமானாறிலுள்ள நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையில் இருந்து நாளாந்தம் கட்டணம் செலுத்தி 2 பவுஸர்களின் குடிநீர் கொள்முதல் செய்து குடிநீர்; விநியோகம் செய்யப்படுகின்றது.
இதனைவிட பவுஸர் எரிபொருள், டயர், பராமரிப்புச் செலவுகள் என செய்யப்படுகின்றன. அத்துடன், குடிநீர் வழங்கலில் ஈடுபடுகின்ற பணியாளர்களுக்கு 10 பேருக்கான கொடுப்பனவு ஆகியவற்றையும் வழங்குகின்றோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
40 minute ago
1 hours ago