2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மாவா பாக்கு விற்பனை செய்தவருக்கு அபராதம்

Thipaan   / 2015 மே 16 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி நகர்ப்பகுதியில் மாவா எனப்படும் போதைப் பாக்கு விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, வெள்ளிக்கிழமை (15) தீர்ப்பளித்தார்.

தண்டப் பணத்தைச் செலுத்தத்தவறின் 3 மாதகாலம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் கூறினார்.

அச்சுவேலி நகரப் பகுதியில் போதைப்பாக்கு விற்பனை செய்த கடை உரிமையாளரை கடந்த ஜனவரி மாதம் காங்கேசன்துறை விசேட போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் கைது செய்திருந்தனர்.

கடை உரிமையாளருக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று, வெள்ளிக்கிழமை (15) தீர்ப்பு வாசிக்கப்பட்டபோதே நீதவான் மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .