Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 மே 16 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திலுள்ள ஆயிரம் ஏக்கர் மரமுந்திரிகை தோட்டத்தை படையினரிடமிருந்து பெற்று, அதனை மக்களுக்காக பயன்படுத்தவுள்ளதாக இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் தலைவர் எல்.சி.விஜியவர்ணசூர்ய தெரிவித்தார்.
கிளிநொச்சி பழைய மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி பிராந்தியத்திற்கான மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் அலுவலகத்தினை வெள்ளிக்கிழமை (15) திறந்து வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
தற்போது குறித்த ஆயிரம் ஏக்கர் மர முந்திரிகைத் தோட்டம் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகிறது. இதனை மர முந்திரிகை கூட்டுத்தாபனம் பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட்டவுள்ளது.
கிளிநொச்சி பிரதேசத்தில் மரமுந்திரிகை பயிர்ச்செய்கையினை ஊக்குவிக்கும் வகையில் இன்றைய தினம் இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பிராந்திய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
இதில் இலங்கை மர முந்திரிகை கூட்டுத்தாபனத்தின் தலைவர் எல்.சி விஜயவர்ணசூர்ய, அதன் பிரதி பொது முகாமையாளர் பி.கொடிகார, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மர முந்திரிகை கூட்டுத்தாபனத்தின் ஆராய்ச்சி விரிவாக்கல் உத்தியோகத்தர் பி.சுரேந்திரா, சந்தைப்படுத்தல் அதிகாரி ஜெயதிஸ்ஸ உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago
07 Jul 2025