Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Sudharshini / 2015 மே 17 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சில சமயங்களில் பொலிஸாரின் பொறுப்பற்ற செயல்கள் குற்றங்கள் இழைக்க ஏதுவாக அமைகின்றன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர மாணவி துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முதலமைச்சரால் ஞாயிற்றுக்கிழமை (17) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மாணவியின் பரிதாப மரணமும் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகமும் எமது சமுதாயத்தின் இன்றைய சீரழிந்த நிலையை எடுத்துக்காட்டுகின்றது. அண்மையில் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் வடமாகாணத்தில் அதிகரித்துள்ள குற்றங்கள் தொடர்பில் பேசினேன். பொதுமக்களின் உதவியுடன் இவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக அவர் எனக்கு வாக்களித்தார். எனினும் நிலைமை கட்டுக்கடங்காமல் செல்கின்றது.
பொலிஸாரின் பொறுப்பற்ற செயலும் குற்றங்கள் இழைக்க ஏதுவாக அமைக்கின்றன. புங்குடுதீவு மாணிவி படுகொலை சம்பவத்தில், தனது மகளைக் காணவில்லையென தாயார் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறையிட்டுள்ளார்.
இவ்வாறான கரிசனை தன்மையற்ற நிலையும், முன்கருதலற்றதும், தாமதங்களும் மேலும் குற்றங்கள் அதிகரிக்க ஏதுவாக அமைகின்றன என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் உணரவேண்டும்.
போர் முடிவடைந்த பின்னர் சட்டத்தின் ஆதிக்கம் குறைவடைந்து வருவதாகவுள்ளது. சட்டத்துக்கு அமைவாக சமுதாயம் நடந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தைச் சீரழிப்பதாக பல நடவடிக்கைகள் நடந்துகொண்டிருப்பது மனவருத்தத்தைத் தருகின்றது.
போதைப்பொருள் பாவனை திட்டமிட்டு மாணவர் சமுதாயத்துக்கு பழக்கப்படுகின்றது என்ற சந்தேகம் உள்ளது. கடமையில் கட்டுப்பாடும், கண்ணியத்துடன் இயங்கும் பொலிஸாரின் அவசியத்தை நான் வலியுறுத்த விரும்புகின்றேன். போதிய பயிற்சிகள் அளித்து மக்கள் நலன் பேணும் சக்தியாக மனித உரிமைகளை பேணும் சக்தியினராகவும் பொலிஸாரை மாற்ற வேண்டும்.
போரால் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களின் தாக்கங்களை உணர்ந்தவர்களாக பொலிஸார் இருக்க வேண்டும். பொலிஸ் உயர் மட்டம் இனியாவது இவற்றை கவனத்தில் எடுக்கும் என்று நம்புகின்றோம்.
மக்கள் நலன் தொடர்பில் பொலிஸாருக்கும் மாகாண சபைக்கும் புரிந்துணர்வு, ஒற்றுமை இருந்தால் சமுதாய சீரழிப்பாளர்களை வெற்றிகொள்ளலாம். மக்களிடையே அறிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது தலையாய கடமையாகும். தமிழ் மக்களிடையே துஷ்பிரயோக கலாசாரம் தலைதூக்கியிருந்தது. பயத்தால் குற்றங்களில் ஈடுபடாதிருந்தோர் பயம் அவர்களை விட்டதும் மிருக வெறியை காட்டி நிற்கின்றார்கள்.
மனித உரிமை, அதிலும் பெண்கள் உரிமைகள் தொடர்பில் எமது சமுதாயம் அறிந்து வைத்திருப்பது முக்கியம். முன்னர் எமது பண்பாட்டுச் சூழல் காரணமாக இயற்கையாகவே அனைவரும் அறிந்திருந்தனர். இனிமேல் அறிவுரைகள், விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் பரப்புவதன் மூலம் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பொது அமைப்புக்கள், சமயம் சார் நிறுவனங்கள் என்பன இவற்றை செய்ய முன்வரவேண்டும்.
வன்முறைகள் சடுதியாக அதிகரிக்க ஏதோவொரு காரணம் இருக்க வேண்டும். வன்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பயந்து ஒதுங்காமால் பொலிஸாருடன் இணைந்து மக்கள் செயற்படவேண்டும் என்று குறிப்பிடப்படடுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
32 minute ago
32 minute ago
39 minute ago