2025 ஜூலை 05, சனிக்கிழமை

மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார செயலமர்வு

Sudharshini   / 2015 மே 24 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவதற்கான திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு, சமூக சேவைகள் அமைச்சால் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் நடத்தப்படவுள்ளதாக சமூக சேவை அமைச்சின் திட்டப் பணிப்பாளர் எஸ்.இராமமூர்த்தி அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக சேவை அமைச்சால் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 3,000 ரூபாய் உதவித் தொகையைப் பெறும் மாற்றுத்திறனாளிகளில் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலிருந்தும் தலா 40 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்தச் செயலமர்வு நடத்தப்படவுள்ளது.

இதற்காக ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் தலா 43,500 ரூபாய் நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலக மட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் ஒன்றுகூடக் கூடிய இடத்தில் இச் செயலமர்வு நடைபெறவுள்ளது. இந்தச் செயலமர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார முயற்சிகளை தெரிவு செய்தல், தொழில் திறன்விருத்தி, உளசமூக நலன் போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளன.

இந்த செயலமர்வில் பங்குபற்றும் ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் 300 ரூபாய் போக்குவரத்துச் செலவு கொடுப்பனவும் உணவும் வழங்கப்படும் என அந்தச் செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .