Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2013 நவம்பர் 13 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுமித்தி தங்கராசா
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வரவுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
அவரது யாழ். விஜயத்துக்கான முன்னேற்பாடாக கெமரூனின் பாதுகாப்பு செயலக குழுவின் இன்று (13) வடக்குக்குச் சென்று அங்கு பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பில் உறுதி செய்து வருகின்றனர்.
அத்துடன் அக்குழுவினர், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ். பொது நூலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது வடக்கின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.
அத்துடன், யாழ். பொது நூலகத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலும் மேற்படி குழுவினர் ஆராய்ந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago