2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

இராணுவ வீரருக்கு மரண தண்டனை

Menaka Mookandi   / 2015 மே 28 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

காங்கேசன்துறை நலன்புரி நிலையத்தில் வைத்து, இராணுவ உயரதிகாரியொருவரை கடந்த 2007ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி சுட்டுக்கொன்ற இராணுவ வீரருக்கு, மரணதண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் திருமதி கனகா சிவபாதசுந்தரம் வியாழக்கிழமை (28) உத்தரவிட்டார்.

குற்றஞ்சாட்டப்பட்ட பொன்னம்பெரும ஆராய்ச்சிகே வசந்த (வயது 39) என்ற சிப்பாய், காங்கேசன்துறை நலன்புரி நிலையத்தில் கடமையாற்றிய போது, தனக்கு விடுமுறை வழங்காமல் இடமாற்றம் செய்கின்றார் என கோபப்பட்டு உயரதிகாரி றலப்பனாவ (39 வயது) மீது ரீ–56 ரக துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார்.   

கடந்த 2011 ஜூலை 8ஆம் திகதி மேற்படி சம்பவம் தொடர்பான வழக்கு யாழ்.மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கின் தீர்ப்பு வியாழக்கிழமை (28) வழங்கப்பட்டது.

தீர்ப்பை வாசித்த நீதிமன்ற ஆணையாளர், குற்றவாளிக்கு எதிரான நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் இந்தக் குற்றம் நிரூபணமாகின்றது. இதனால் இந்த மன்று அவரைக் குற்றவாளியாக இனங்கண்டு மரணதண்டனை விதிக்கின்றது என்றார்.


You May Also Like

  Comments - 0

  • Pradee Friday, 29 May 2015 09:12 AM

    இந்த கொலை நடந்தது 2007, நீதிமன்றத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டது 2011, தீர்ப்பு வழங்கப்பட்டது 2015. நடந்து 8 வருடத்திற்கு பிறகுதான் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இதனால்தான் மக்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். வித்தியாவின் வழக்கும் இப்படி நீர்ந்து போகாமல் இருந்தால் சரி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .