2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

போலி 1,000 ரூபாய் நாணயத்தாளுடன் ஒருவர் கைது

Menaka Mookandi   / 2015 மே 29 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், இளவாலை பகுதியிலுள்ள மதுபான விற்பனை நிலையத்தில் 1000 ரூபாய் போலி நாணயத்தாளை வழங்கி மதுபானம் கொள்முதல் செய்ய முற்பட்ட சந்தேகநபர் ஒருவரை வியாழக்கிழமை (29) இரவு கைது செய்ததாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுல டி சில்வா தெரிவித்தார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த மேற்படி சந்தேகநபர் இளவாலையிலுள்ள கல்லுடைக்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். பணியாற்றிய இடத்தில் அவருக்கு வழங்கப்பட்ட சம்பளப் பணத்தில், 1000 ரூபாயைக் கொண்டு மதுபான நிலையத்துக்கு மதுபானம் வாங்கச்சென்ற போது, சந்தேகநபர் வழங்கியது போலி 1000 ரூபாய் தாள் என்பதை அறிந்த மதுபான விற்பனை நிலைய உரிமையாளர், இது தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவித்தார்.

அவ்விடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்தனர். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொறுப்பதிகாரி கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .