2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

இளைஞன் மீது வாள்வெட்டு

Thipaan   / 2015 மே 30 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நாரந்தனை தெற்கு, ஊர்காவற்துறை பகுதியில் உள்ள வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை (29) இரவு அத்துமீறி நுழைந்த குழு, இளைஞன் மீது வாள்வெட்டினை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் சனிக்கிழமை (30) தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் எஸ்.சசிகரன் என்பவர் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் வந்த மூன்று பேர் கொண்ட குழு, இத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக உறவினர்கள், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .