Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூன் 08 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை மதவடியில் திங்கட்கிழமை (08) அதிகாலை மோட்டார் சைக்கிளில் சென்ற மீனவரை பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில் மீனவர்; உயிரிழந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் கூறினர்.
சாவற்காட்டைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான எஸ்.நாதன் (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
காக்கைதீவு கடலில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்றுவிட்டு அதிகாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தவரை பின்னால் வந்த பஸ் மோதி விட்டு சென்றுள்ளது.
படுகாயமடைந்தவரை அப்பகுதி மக்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும், அவர் இடையில் உயிரிழந்தார். சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
33 minute ago
44 minute ago
48 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
44 minute ago
48 minute ago
53 minute ago