Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூன் 08 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
யாழ். நகரத்தில் கடந்த மே மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற குழப்பநிலை மற்றும் நீதிமன்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்திய சுற்றுலாப் பயணியை விடுதலைசெய்யுமாறு செய்து யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் திங்கட்கிழமை (08) உத்தரவிட்டார்.
நீதிமன்ற கட்டடத்தொகுதி மீது தாக்குதல் நடத்தியமை, பொலிஸ் கண்காணிப்பகத்தை தாக்கியமை, நகரப்பகுதியில் குழப்ப நடவடிக்கையில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் 130 ஷபேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இவர்கள் தனித்தனியாக 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தனித்தனியாக குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்ற தாக்குதல், சட்டவிரோத கூட்டம் கூட்டி வாகனங்களை அடித்து சேதமாக்கியமை மற்றும் கடமையிலிருந்த பொலிஸாரை காயப்படுத்தியமை தொடர்பில் 43 சந்தேநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இதில் உள்ளடங்கியிருந்த இந்திய பிரஜை இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டார்.
இவர் குற்றமிழைத்தார் என்பதற்கான சாட்சியங்கள் இல்லையென்பதாலும், இவரை விடுதலை செய்வதற்கு பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
புங்குடுதீவு மாணவி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ். நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்தே மேற்படி அசம்பாவிதங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago