2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மாற்றுவலுவுள்ளோருக்கு உதவிகளை வழங்கும் சிவன் பவுண்டேஸன்

George   / 2015 ஜூன் 08 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

மாற்றுவலுவுள்ள பிள்ளைகளின் மருத்துவச் செலவு, அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்தல் மற்றும் அவர்களுக்கான பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகளை சிவன் பவுண்டேஸன் நிறுவனம் செய்து வருவதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கணேஸ் வேலாயுதம் தெரிவித்தார்.

யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் திங்கட்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்;. 

அவர் தொடர்ந்து கூறுகையில், வடமாகாணத்திலுள்ள மாற்றுவலுவுடையோருக்கான தேவைகளை நிறைவு செய்வதற்காக கிளிநொச்சி புதுக்குடியிருப்பு மற்றும் யாழ்ப்பாணம் தட்டாதெருச் சந்தி ஆகியவற்றில் அலுவலகங்களை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார். 

காரைநகர் ஊரிப்பகுதிக்கு குடிநீர் வழங்கி வருவதாகவும், யாழ்ப்பாணத்திலுள்ள நலன்புரி முகாமுக்குச் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து உதவிகள் செய்து வருவதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .