Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூன் 10 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
வடமாகாணத்தில் உரிமம் பெற்ற சகல மதுபான விற்பனை நிலையங்களும் மதுவரித் திணைக்களத்தால் நிர்ணயிக்கப்பட்ட நியமங்களை சரியாக பின்பற்றுகின்றனவா? என்று முழுமையாக ஆராய்ந்து, விதிகளுக்கு முரணாகச் செயற்படும் மதுபான விற்பனை நிலையங்களை ரத்துச் செய்வது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் மற்றும் மதுவரித் திணைக்கள ஆணையாளரை கோரும் பிரேரணை, வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் செவ்வாய்க்கிழமை(09) நடைபெற்றது. இதன்போது, அவைத்தலைவர் இந்தப் பிரேரணையை சபையில் முன்வைத்தார்.
பிரேரணை தொடர்பில் அவைத்தலைவர் கூறுகையில், யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களுக்கும் சமூகச் சீரழிவுகளுக்கும் மது மற்றும் போதைப்பொருள் பாவனையே காரணம் என மக்கள் நினைக்கின்றனர். மதுவரித் திணைக்களத்தால் உரிமங்கள் வழங்கப்பட்ட மதுபான விற்பனை நிலையங்கள் பாரதூரமான வகையில் மதுபானங்களை விற்பனை செய்து வருகின்றன.
மதுபான நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், பாடசாலைகள், பொது இடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் காணப்படுகின்றன என்றார்.
இதன்போது உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல வடமாகாணத்தில் மற்றைய இடங்களிலும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதால் வடமாகாணம் என்று இதில் மாற்றம் செய்ய வேண்டும். மற்றைய மாவட்டங்களிலும் இத்தகைய நிலை காணப்படுகின்றது.
முல்லைத்தீவில் அண்மையில் மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற கயிறுழுத்தல் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு இராணுவத்தினர் மதுபானம் கொடுத்தனர். என்றார்.
ரவிகரன் கூறியது போல வடமாகாணம் என மாற்றப்பட்ட பிரேரணையை, உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் முன்மொழிய, மற்றொரு உறுப்பினராக சந்திரலிங்கம் சுகிர்தன் வழிமொழிய பிரேரணை ஏகமனதாக நிறைவேறியது.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago