Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 10 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-குணசேகரன் சுரேன்
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீடத்தின் இரண்டாவது சர்வதேச ஆய்வரங்கு வியாழன் (11) வெள்ளி (12) ஆகிய கிழமைகளில் கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளதாக முகாமைத்துவ வணிகபீடப் பீடாதிபதி தி.வேல்நம்பி தெரிவித்தார்.
'அறிவு மற்றும் புத்தாக்கத்தினுடாக உற்பத்தி திறனை மேம்படுத்துதல்' என்ற தொனிப்பொருளை மையமாக கொண்டு இந்த ஆய்வரங்கு நடைபெறவுள்ளது. இந்த ஆய்வரங்குக்காக 18 தலைப்புகளில் ஆய்வறிக்கைகள் கோரப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில் 18 உப தலைப்புகளில் 34 அமர்வுகளாக 167 ஆய்வுக்கட்டுரைகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆய்வாளார்களால் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், சிறப்பு விருந்தினராக இந்தியா கைத்தொழில் அபிவிருத்தித் திணைக்கள பிரதி ஆணையாளர் நு.பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
அவுஸ்ரேலிய மொனாஷ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரமணி சமரதுங்க, காகில்ஸ் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரியும் சிரி கோல்டிங் பொதுக் கம்பனியின் முகாமைத்துவ நிர்வாக இயக்குநருமான றஞ்சிற் பேஜ் ஆகியோர் ஆய்வரங்கத்தின் பிரதான பேச்சாளார்கள் ஆவார்கள்.
முதல் நாளில் 19 அமர்வுகளின் கீழ் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து மாலை நேர நிகழ்ச்சியாக 5:30 மணியளவில் கலை நிகழ்வுகள் கைலாசபதி கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளன.
இரண்டாம் நாளில் 'வளர்ந்து வரும் பொறுப்புமிக்க நிர்வாகம்' என்ற தொனிப்பொருளில் குழுநிலை கலந்துரையாடலும் அதனை தொடர்ந்து 15 அமர்வுகளில் ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வாளர்களினால் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பீடாதிபதி தெரிவித்தார்.
15 minute ago
17 minute ago
24 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
17 minute ago
24 minute ago
30 minute ago