2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அராலியில் 30 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டன

Thipaan   / 2015 ஜூன் 10 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலிகாமம் மேற்கு (சங்கானை) பிரதேச சபைக்குட்பட்ட அராலி ஊரத்திப் பகுதியில் வசித்து வந்த 30 குடும்பங்களுக்கு காணிகள் பிரித்துக்கொடுக்கப்பட்டு, அதற்கான காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி, ஐங்கரன் புதன்கிழமை (10) தெரிவித்தார்.

ஊரத்திப் பகுதியில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக சொந்தக் காணிகள் இல்லாமல் இந்த 30 குடும்பங்களும் வசித்து வந்தனர். சொந்தக் காணிகள் இல்லாமையால் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இது தொடர்பில் அப்பகுதியில் இயங்கும் கிராமமட்ட அமைப்புக்கள் எனது கவனத்துக்கு கொண்டுவந்தனர். அப்பகுதிக்குச் சென்று நேரடியாக ஆராய்ந்து மக்களது நிலைபற்றி கேட்டறிந்து கொண்டேன்.

தொடர்ந்து காணிகள் வழங்குவதற்கான உரிய சட்ட ஏற்பாடுகளைச் செய்து காணிகள் மக்களுக்கு வழங்கப்பட்டு, அதற்கான உறுதிகள் பிரதேச சபையின் கலாசார மண்டபத்தில் வைத்து மக்களுக்கு வழங்கப்பட்டதாக தவிசாளர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .