Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 10 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கி.பகவான்
யாழ்.சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான வகையில் காணிகளை வைத்திருந்த ஐவருக்கு தலா 3000 ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் செவ்வாய்க்கிழமை (09) தீர்ப்பளித்தார்.
சாவகச்சேரி சுகாதார வைத்தியதிகாரி பணிமனையினர், சாவகச்சேரி, கொடிகாமம் பொலிஸ் இணைந்து கடந்த 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது, டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான வகையில் காணிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 7 பேருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 7பேரில் ஐவர் மன்றுக்குச் சமூகமளித்திருந்தனர். ஐவருக்கு அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago