Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 11 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
தெல்லிப்பழை, துர்க்காபுரம், 8ஆம் கட்டை பேரம்பலம் வைரவர் ஆலயத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (13) நடைபெறவுள்ள வேள்வியின் போது வெட்டப்படும் ஆடுகளுக்கு கிராமஅலுவலரிடம் உரிமைச் சான்றிழ்களை பெற்றுவருமாறு ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இந்த ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவும் வேள்வியும் எதிர்வரும் சனிக்கிழமை அதிகாலையில் நடைபெறவுள்ளது. அதிகாலை நடைபெறும் படையல்களைத் தொடர்ந்து ஆடுகள், சேவல்கள் பலியிடும் நிகழ்வு இடம்பெறுகின்றது.
வேள்வி நடத்துவது தொடர்பில் சுகாதார வைத்தியதிகாரியின் அறிவுறுத்தல் மற்றும் நீதிமன்ற கட்டளை என்பவற்றுக்கு அமைவாக இந்த வேள்வி நடத்தப்படவுள்ளதாக நிர்வாகத்தினர் கூறினர்.
வெட்டப்படும் ஆடுகளுக்கான உரிமைச் சான்றிதழ்களை பெற்றுவரும்படி சுகாதார வைத்தியதிகாரி பணிமனையினர் அறிவுறுத்தியமைக்கமைய அதனை கட்டாயமாக்கியுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் கூறினர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago