Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஜூன் 14 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுபான விற்பனை நிலையங்களின் உரிமங்களை பரிசோதனை செய்து அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பில் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடமாகாண சபையின் கடந்த 9ஆம் திகதி அமர்வில், மதுபானசாலைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
யாழ்.ப்பாணத்தில் இடம்பெறும் மனிதாபிமானமற்ற குற்றவியல் செயற்பாடுகளுக்கு அதிகரித்த மதுபான நுகர்வு, போதைப்பொருள் பாவனையுமே காரணம் என மக்கள் மனங்களில் பரவலாகக் காணப்படுகின்றது.
மதுவரித் திணைக்களங்களின் வழிகாட்டல்களையும், நியமங்களையும் மீறியே மதுபான விற்பனை நிலையங்கள் உரிமங்களைப் பெற்று காணப்படுகின்றன. பல மதுபான விற்பனை நிலையங்கள், வணக்கஸ்தலங்கள், பாடசாலைகள், பொது நிறுவனங்கள் என்பவற்றுக்கு அண்மையில் அமையப்பெற்றுள்ளன.
வழங்கப்பட்டிருக்கும் உரிமங்கள் யாவும் வடமாகாணத்தில், குறிப்பாக யாழ்;ப்பாணத்தில் வழங்கப்பட்டுள்ள மதுபான உரிமங்கள் சட்ட விதிகளுக்கு அமைய வழங்கப்பட்டுள்ளதா என்பதை முழுமையாக மீளாய்வு செய்யுமாறும், அவ்வாறு விதிகளை மீறியவைகளை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனுமதியற்று இயங்கும் சகல மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கும் புதிய உரிமங்கள் எதனையும் வடமாகாணத்தில் வழங்கக்கூடாது எனவும் கோரப்படுகின்றது.
எமது கோரிக்கையில் காத்திரமான நடவடிக்கை எடுப்பது மனிதாபிமானமற்ற, குற்றவியல், வன்செயல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு பாரிய வழிவகுக்கும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago