Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஜூன் 14 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
எமது மாணவர்கள் தங்களது திறன்களை அறிவியல் தொழில்நுட்பத்துறை சார்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வு கூடத்திறப்புவிழா சமீபத்தில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையாக இந்த தொழில்நுட்ப ஆய்வு இருப்பதை, பின்வரும் காலங்களில் வரலாறு நிச்சயம் சான்றுபகரும். இன்று வாழ்க்கையும் கல்வியும் செயன்முறைக்கூடாகவே வளர்த்துச் செல்லப்படுவதை நாம் அறிவோம். எட்டப்பட வேண்டிய இலக்கை இலகுவாக அடைவதற்கு யதார்த்தமான அணுமுறைகள் அவசியம். அது எல்லாவிதமான துறைகளுக்கும் பொருந்தும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிகளில் தோற்றுத் தோற்று பின்னர்தான், இறுதியாக உலகம் என்றைக்கும் போற்றும் வெற்றிகளை கண்டுள்ளார்கள் என்று அவர் கூறினார்.
வெற்றிகளை அடைவதற்கு நிறைய தேடவேண்டியும் உழைக்க வேண்டியும் இருந்தது. இன்றைய காலத்தில் வெற்றிபெறுவதற்கு துணையாக சகலதும் எமது காலடியில் இருக்கின்றது. ஆனால் நம் இளைய சமுதாயம் மனதை அலையவிட்டு, வாழக்கையில் உறுதியான அத்திபாரத்தை இடுவதற்கு தவறுகின்ற துர்ப்பாக்கிய சூழல் வளர்ந்து வருகின்றது என்று அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற வளங்களை மாணவர்கள் சரியான முறையில் முழுமையாக உச்சமாக பயன்படுத்தி வெற்றிகளை நோக்கிப் பயணிக்க வேண்டும். இன்று நாசாவரை இந்த மண்ணின் மைந்தர்கள் வியாபித்து நிற்கின்றார்கள். தொழில்நுட்பத் துறையில் பல்வேறு கருதுகோள்களை விதிகளை பல இந்த மண்ணின் பேராசான்கள் உருவாக்கியிருக்கின்றார்கள். தமிழர்களின் அறிவு ஆளுமை இன்றைக்கு நேற்றல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே உணரப்பட்டது என்று அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
17 minute ago
28 minute ago
32 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago
32 minute ago
37 minute ago