Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூன் 15 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கி.பகவான்
யாழ். கைதடிச் சந்தியில் ஞாயிற்றுக்கிழமை (14) வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
மீசாலை கிழக்கைச் சேர்ந்த சுப்பிரமணியம் சர்மிளன் (வயது 24), அம்பாறை பிரதான வீதியைச் சேர்ந்த சண்முகநாதன் அருணன் (வயது 26) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.
மிதவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் எதிரில் டிப்பர் வாகனம் வருவதை அவதானித்துவிட்டு, மோட்டார் சைக்கிளை வீதியின் ஓரத்துக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்தாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் இருவருடைய தோள்மூட்டுக்களும் உடைந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
22 minute ago
24 minute ago
31 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
24 minute ago
31 minute ago
37 minute ago