Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஜூன் 15 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்தது மாத்திரமன்றி, வீட்டிலிருந்தவரை அடித்து காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட காரைநகர் பிரதேச சபை தவிசாளர் வேலாயுதம் ஆனைமுகனை, எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் திங்கட்கிழமை (15) உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேலும் 4 பேரை தலா 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்த நீதவான், பிணை வழங்கப்பட்டவர்கள் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் கையொப்பமிடவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
கடந்த மே மாதம் 22ஆம் திகதி காரைநகர் வலந்தலை பகுதியிலுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவரின் வீடொன்றுக்குள், ஐந்து பேர் கொண்ட குழுவினவினர் அத்துமீறி நுழைந்து கட்சியின் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் கிருபராஜா கிருஜாந்தன் (வயது 30) காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சை பெற்று கடந்த 8ஆம் திகதி வீடு திரும்பிய உறுப்பினர், தன்னைத் தாக்கிய தவிசாளருக்கு எதிராக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், ஐவரையும் கைது செய்து ஊர்காவற்றுறை பதில் நீதவான் இ.சபேசன் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (14) ஆஜர்ப்படுத்திய போது, ஐவரையும் இன்று திங்கட்கிழமை (15) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
17 minute ago
28 minute ago
32 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago
32 minute ago
37 minute ago