2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கைப் பார்வையிட வந்த தென்னிலங்கை சட்டத்தரணிகள்

Sudharshini   / 2015 ஜூன் 15 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-   நா.நவரத்தினராசா, எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்குத் தொடர்பான விசாரணைகளை பார்வையிடுவதற்காக தென்னிலங்கையிலிருந்து வருகை தந்திருந்த மூன்று சட்டத்தரணிகளும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (15) பிரசன்னமாகியிருந்தனர்.

மாணவி கொலை வழக்குத் தொடர்பான விசாரணைகள் இன்று (15) நீதிமன்றில் நடைபெறுவதை மன்றில் அமர்ந்திருந்து இந்த 3 சட்டத்தரணிகளும் பார்வையிட்டனர்.

இந்தச் சட்டத்தரணிகளின் வருகையால் குழப்பமடைந்த வித்தியா சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி கே.வி.தவராஜா, வித்தியாவுக்கு ஆதரவாக அல்லது சந்தேகநபர்களுக்கு ஆதரவாக ஆஜராவதற்காக வந்துள்ளீர்கள் என அவர்களிடம் வினாவியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அம்மூன்று சட்டத்தரணிகளும், யாருக்காகவும் ஆஜராக வரவில்லையெனவும் மன்றில் வழக்கு நடைபெறுவதைப் பார்வையிடுவதற்காக வருகை தந்ததாக கூறியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .