2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஆலயத்தில் தகராறு; வாள்வெட்டை மேற்கொண்டவர் சரண்

Menaka Mookandi   / 2015 ஜூன் 16 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், அல்வாய் பகுதியிலுள்ள ஆலயமொன்றில் கடந்த 13ஆம் திகதி ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் செவ்வாய்க்கிழமை (16) சரணடைந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலயமொன்றில் உபயகாரர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து புற்றாலையைச் சேர்ந்த எஸ்.சந்திரன் (வயது 61) என்பவர் வாள்வெட்டுக்கு இலக்காகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, வாள்வெட்டை மேற்கொண்ட சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார். இந்நிலையில் சந்தேகநபர் இன்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

சரணடைந்தவரை சாவகச்சேரி பொலிஸார் தங்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நெல்லியடி பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .