Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூன் 17 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
வடமாகாணத்தில் கடமையாற்றும் தமிழ், சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான, பெருங்குற்றம் மற்றும் சிறுகுற்றம் தொடர்பான மேலதிக வதிவிடப்பயிற்சி நெறி காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய பயிற்சி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (16) முதல் நடைபெற்று வருவதாக காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு நடைபெற்றுவருகின்றமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொலிஸ் நிலையங்களில் பொதுமக்களுடன் எவ்வாறு தொடர்பை பேணுவது, சிறுகுற்றங்கள், பெருங்குற்றங்களை கட்டுப்படுத்துவது போன்ற விடயங்கள் இந்தச் செயலமர்வில் விளக்கமளிக்கப்படுவதுடன், ஆளுமை விருத்தி தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
இந்த செயலமர்வு எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், பொலிஸ் தலைமைப்பீட பயிற்சி கல்லூரியின் இருந்து வருகை தந்த உயர் அதிகாரிகள் செயலமலர்வின் வளவாளர்களாக உள்ளனர்.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago