Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 17 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் முதலாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு இரண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் எதிர்வரும் 21ஆம் திகதி யாழ்;பாணம் மத்திய கல்லூரி மைதானம் மற்றும் தேசிய கல்வியல் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளதாக யாழ். இந்தியத் துணைத்தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் யாழ். இந்திய துணைத்தூதரகம் புதன்கிழமை (17) அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்று, ஜூன் மாதம் 21ஆம் திகதியானது சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் பிரகடனப்படுத்தப்பட்டது.
யாழ். இந்தியத் துணைத்தூதரகமானது முதலாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இரண்டு சிறப்பு நிகழ்வுகளை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளது.
முதலாவது நிகழ்வு ஜூன் மாதம் 21 திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 07.30 மணி தொடக்கம் 9.30 மணி வரை யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் 4000 முதல் 5,000 மாணவர்கள் வரை பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரண்டாவது நிகழ்வு ஜூன் மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி தொடக்கம் 6.30 மணி வரை யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெறும். இந்நிகழ்வில் 200 முதல் 250 ஆசிரிய மாணவர்கள் பங்கு பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் இரண்டு நிகழ்வுகளிலும் பிரதம விருந்தினராக கலந்துகொள்கின்றார். சிவன் அறக்கட்டளை நிறுவன அதிபர் கணேஸ் வேலாயுதம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் 5000 வரையான மாணவர்களுக்கும் சிற்றுண்டி வழங்க ஏற்பாடுகளைச் செய்துள்ளார்' என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
6 hours ago
7 hours ago