Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 17 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாணம், வரணி மத்திய கல்லூரியில் தரம் 10இல் கல்விகற்கும் மாணவனை காலால் உதைத்து அந்தரங்க உறுப்பை காயப்படுத்திய ஆசிரியரை 1 இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் புதன்கிழமை (17) அனுமதியளித்தார்.
மாணவர் பிழை செய்யும் போது அதனை பெற்றோருக்குத் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இவ்வாறு கடுமையான தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடாது என ஆசிரியருக்கு நீதவான் எச்சரிக்கை செய்தார்.
கடந்த திங்கட்கிழமை (15) காலையில் மாணவர்கள் சிரமதானம் செய்யும் வேளையில் மேற்படி மாணவன் சிரமதானம் செய்யாமல் நின்றதை அவதானித்த ஆசிரியர் சப்பாத்து காலால் மாணவனை மீது உதைத்துள்ளார்.
அது தவறுதலாக மாணவனின் அந்தரங்க உறுப்பில் பட்டு அதில் காயம் ஏற்பட்டது. உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மாணவன் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பில் மாணவனின் பெற்றோர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், ஆசிரியரை செவ்வாய்க்கிழமை (16) மாலை கைது செய்தனர்.
11 minute ago
16 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
1 hours ago
2 hours ago