2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பிரதேச செயலக பணியாளர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்

George   / 2015 ஜூன் 18 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

கரவெட்டி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பணியாளர் ஒருவர், புதன்கிழமை (17) மதியம் கோவில் சந்திப் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகி, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த அருளானந்தம் உதயகுமார் (வயது 30) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகினார்.

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவரை, நெல்லியடி கொடிகாமம் வீதி கோவில் சந்திப் பகுதியில் மறிந்த 3 பேர் கொண்ட கும்பல், ஹெல்மட்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

தாக்கப்பட்டமையால் அவர் மயக்கமடைய தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர்.

அயலவர்களின் உதவியுடன் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .