Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 18 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்குக்கு அழைக்கப்பட்டு நிதியுதவி பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் யாரென்பதை சபைக்கு தெரியப்படுத்துமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா கோரியுள்ளார்.
இது தொடர்பில் தவராசா மேலும் கூறுகையில், 'வடமாகாண சபையை புறக்கணித்து விட்டு வடக்கின் அபிவிருத்திக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை தனியாக தெற்குக்கு அழைத்து நிதியுதவி வழங்கப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதென வடமாகாண முதலமைச்சர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது' என்றார்.
அந்தச் செய்தியில் கூறப்பட்டவாறு முதலமைச்சர் ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டினாரா? எனவும், அவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டதாயின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் யாரை தெற்குக்கு தனியாக அழைத்து அவ்வாறு நிதி வழங்கப்பட்டது? வழங்கப்பட்ட நிதி எவ்வளவு? யாரினால் அந்நிதி வழங்கப்பட்டது என்ற விபரங்களை எதிர்வரும் 23 ஆம் திகதி அமர்வின் போது, முதலமைச்சர் தெரியப்படுத்த வேண்டும்' என தவராசா கோரியுள்ளார்.
15 minute ago
17 minute ago
24 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
17 minute ago
24 minute ago
30 minute ago