Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூன் 18 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் போட்டியிட்டுக் கொண்டு ஓடிச்சென்ற தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை வியாழக்கிழமை (18) கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வியாழக்கிழமை (18) காலை புறப்பட்ட போக்குவரத்துச் சபை பஸ் மற்றும் தனியார் பஸ் என்பன போட்டியிட்டு ஓடி, பயணிகள் இறங்கவேண்டிய இடங்களில் பயணிகளை இறக்காமல் சென்றுகொண்டிருந்தனர்.
இவர்களுக்கிடையிலான போட்டி கிளிநொச்சி நகரை அண்மித்ததும் முறுகல் நிலையை அடைந்து கிளிநொச்சி நகரத்துக்கு அண்மையிலுள்ள இடத்தில் இரண்டு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் பயணிகள் கிளிநொச்சி பொலிஸாருக்கு தொலைபேசியில் தெரிவித்தனர். அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துநர்களைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டிலும் பயணித்த பயணிகள் பிறிதொரு பேருந்தில் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
6 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago