Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூன் 19 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கூட்டுறவு அமைப்புக்களில் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும்; பொருட்டு தொழில் வங்கி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
வடமாகாண கூட்டுறவு அமைச்சின் வழிகாட்;டலின்படி கூட்டுறவு அமைச்சின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தத் தொழில் வங்கி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கூட்டுறவுத் தொழில் வங்கியில் பதிவு செய்ய விரும்புவோர் யாழ்;ப்பாணம் மாவட்ட கூட்டுறவுச் சபை அலுவலகத்தில் விண்ணப்பப்படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, செயலாளர் யாழ். மாவட்ட கூட்டுறவுச் சபை கூட்டுறவாளர் வீரசிங்கம் கட்டடத் தொகுதி 2 ஆம் மாடி இல 12 கே.கே.எஸ். வீதி யாழ்;ப்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.
கூட்டுறவு அமைப்பின் பொது முகாமையாளர் பதவி முதல் பல்வேறு பதவிகளுக்கும் ஏற்றவகையில் இத்தொழில் வங்கியூடாக எதிர்காலத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளது.
இத்துறையில் கூட்டுறவு சேவையாளர் ஆணைக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படைச் சம்பளம், விசேட படி 15 வீதம், தற்போது அதிகரிக்கப்பட்ட 30 வீத சம்பள அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவுப்படி மற்றும் ஊக்குவிப்புப் படிகள் என்பவற்றுடன் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி பணிக்கொடை, கூட்டுறவு ஊழியர் நலனோம்பு நிதி ஆகிய கொடுப்பனவுகளும் உரித்தான லீவுச் சலுகைகளும் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago