Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூன் 20 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சொர்ணகுமார்
யாழ்ப்பாணத்தில் வீடுகளில் வைத்து மதுபானம் அருந்துவதுக்கு அனுமதிக்கும் கலாசாரம் இல்லையென்பதால் பலர் வீதிகளில் இருந்து மது அருந்துகின்றனர். வீதிகளில் மது அருந்தும் போது கைது செய்யப்பட்டவர்களும் இதனையே கூறுகின்றனர். யாழ்;ப்பாணத்தில் நல்ல ஒரு கலாசாரம் இருப்பதை வரவேற்கின்றேன் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியொரவர் கூறினார்.
யாழ்.சிவில் பாதுகாப்பு கலந்துரையாடலொன்று வெள்ளிக்கிழமை (19) யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பொறுப்பதிகாரி இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து அவர் கூறுகையில்,
மதுபான விற்பனை நிலையங்களில் இருந்து மது அருந்துவதுக்கு அதிகளவான செலவுகள் என்பதற்காக தாங்கள் வீதிகளில் இருந்து மது அருந்துவதாக மது அருந்துபவர்கள் கூறுகின்றனர் என்றார்.
இது தொடர்பாக வடபிராந்திய பொலிஸ் மா அதிபர் ஈ.கே.பெரேரா கருத்துக்கூறுகையில்,
சட்டவிரோத மது விற்பனை மற்றும் மதுப்பாவனை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.மாவட்டச் செயலாளர் மற்றும் வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பள்ளிஹக்கார ஆகியோரால் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, பாடசாலைகளிலிருந்து 500 மீற்றர் தூரத்துக்கு அப்பால் இவ்வாறான நிலையங்கள் அமைந்திருக்க வேண்டும் என்பது நிபந்தனை. ஆகவே, இது தொடர்பில் வியாழக்கிழமை (18) பொலிஸாரால் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது. இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
9 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
2 hours ago