Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூன் 20 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சொர்ணகுமார் சொரூபன்
தற்போது காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இயங்கி வரும் குறிகட்டுவான் பொலிஸ் கண்காணிப்பகத்தை 24 மணிநேரமும் மீண்டும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என வடபிராந்திய பொலிஸ் மா அதிபர் ஈ.கே.பெரேரா தெரிவித்தார்.
யாழ். சிவில் பாதுகாப்பு கலந்துரையாடலொன்று வெள்ளிக்கிழமை (19) யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போது, ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கருத்துக்கூறுகையில்,
'குறிகட்டுவான் பொலிஸ் கண்காணிப்பகம் அடித்து நொருக்கப்பட்டமை தொடர்பான விசாரணை தொடர்பில் தெளிவுபடுத்தப்படவேண்டும்' என கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளிக்கையிலேயே வடபிராந்திய பொலிஸ் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
புங்குடுதீவு மாணவி படுகொலையைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 17 ஆம் திகதி குறிகட்டுவன் பொலிஸ் கண்காணிப்பகம் தாக்குதலுக்குள்ளாகியது. இதனையடுத்து, கண்காணிப்பகம் தற்போது, காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இயங்கி வருகின்றது.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான புலன் விசாரணைகள் ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். புலன் விசாரணைகள் முடிவுக்கு வந்ததும், எதிர்காலத்தில் மீண்டும் 24 மணிநேரமும் பொலிஸ் சேவை இடம்பெறும் என்று கூறினார்.
24 minute ago
26 minute ago
33 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
26 minute ago
33 minute ago
39 minute ago