Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 22 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
கொடிகாமம், மீசாலை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து கட்டிலுக்கு கீழ் ஒளிந்திருந்த 23 வயதுடைய இளைஞனை, எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை ஞாயிற்றுக்கிழமை (21) உத்தரவிட்டார்.
மாடி வீடான மேற்படி வீட்டில் வீட்டிலுள்ளவர்கள் கொழும்புக்குச் சென்றமையால் பெண் ஒருவர் தனிமையில் இருந்துள்ளார். சனிக்கிழமை (20) இரவு வீட்டுக்கு அருகில் ஒருவர் நடமாடியதுடன் நாய் கடுமையாக குரைப்பதை அவதானித்த பெண், கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
வீட்டுக்குச் சென்ற பொலிஸார் வீட்டுக்குள் கட்டிலொன்றுக்கு கீழ் பதுங்கியிருந்த 23 வயதுடைய இளைஞனைக் கைது செய்ததுடன், அவரிடமிருந்து குறடு, கத்தி உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
21 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago