Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூன் 27 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு விநாயகபுரத்தில் 22.7 மில்லியன் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் வியாழக்கிழமை (25) திறந்து வைக்கப்பட்டது.
வடமாகாண விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தை, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் திறந்து வைத்து விநாயகபுரம் விவசாயிகளிடம் கையளித்தார்.
போரினால் இடம்பெயர்ந்த விநாயகபுரம் மக்கள் மீளக்குடியேறியதன் பின்னர், நீர்ப்பாசன வசதிகள் இல்லாமையால் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியாமல் இருந்தனர். இது தொடர்பில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, வவுனிக்குளம் இடதுகரை வாய்க்காலிலிருந்து நீரைப்பெறும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 130 விவசாயக் குடும்பங்கள் பயன் அடையவுள்ளன.
விநாயகபுரம் ஏற்று நீர்ப்பாசனத்திட்டத்தில் கால்வாய்களுக்குப் பதிலாக குழாய்களின் மூலம் நீர் விநியோகிக்கப்படுவதோடு, ஒவ்வொரு விவசாயியும் தான் பயன்படுத்தும் நீரின் அளவை அறிவதற்கேற்ற முறையில் விவசாயக் காணிகளில் தனித்தனியாக நீர் அளவைமானிகளும் பொருத்தப்பட்டுள்ளன. நீர் விரயமாகாத விதத்தில் இவ்வாறானதொரு ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் வடக்கில் உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் ந.ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் நடைபெற்ற இத்திறப்புவிழா நிகழ்ச்சியில், வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் சோ.சண்முகானந்;தன், ஓய்வுநிலை நீர்ப்பாசனப் பணிப்பாளர் சோ.சிவபாதம், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர்கள் ந.சுதாகரன், ந.நவநேசன் ஆகியோருடன் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago