Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூன் 28 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி கட்டைக்காடு கிராமத்தின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாமையினால் சுமார் 216 குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கட்டைக்காடு கிராமத்தில் தற்போது 216 வரையான குடும்பங்கள் வாழந்து வருகின்றன.
இந்நிலையில் குறிப்பிட்ட கிராமத்தின் பிரதான வீதி முதல் ஏனைய குடியிருப்பு வீதிகள் வரை எந்தவீதியும் இதுவரை புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றது. குறித்த வீதிகள் பாரிய குன்றும் குழியுமாக காணப்படுவதுடன் நீர்ப்பாசனக் வாய்க்கால்;களையும் கழிவு வாய்க்கால்களையும் அண்டியதாக வீதிகள் காணப்படுவதனால் வெள்ளநீர் தேங்கிக் காணப்படுகின்றது.
இதனால் இவ்வீதியூடாக போக்குவரத்துக்களில் ஈடுபடும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, குடியிருப்புக்களில் வெள்ளநீர் வழிந்தோடக் கூடிய கழிவு வாய்க்கால்கள் புனரமைக்கப்படாமையினால் பருவமழைகாலங்களில் குடியிருப்புக்களில் வெள்ளநீர் தேங்கிக் காணப்படுவதுடன் தற்காலிக வீடுகளும் சேதமடைந்து வருகின்றன.
இதனைவிட குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கான மின் இணைப்புக்கள் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் இரண்டு அங்கத்தவர்கள் தனி அங்கத்;தவர்களை கொண்ட குடும்பங்கள் வீட்;டுத்திட்டங்களுக்கான புள்ளியிடல் முறையில் தெரிவு செய்யப்படாத குடும்பங்கள், நிரந்தர வீடுகள் இன்றி தற்காலிக வீடுகளில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றன.
இவ்வாறு அடிப்;படை வசதிகளை ஏற்படுத்தித்தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கண்டாவளைப்பிரதேச செயலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அனர்த்த குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன் தமக்கு கிடைக்கப் பெறுகின்ற நிதிக்கு ஏற்றவாறு வீதிகள் படிப்படியாக திருத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago